நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்றே பொதுமக்கள் கருதுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த நாடும் ஆபத்தை எஎதிர்கொண்டுள்ள நிலையில் வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பினார்.

தேசிய நெருக்கடி ஏற்படும் போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை வகுப்பது அரசாங்கத்தின் பணி என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தின் இயலாமை காரணமாக மக்கள் துன்பப்பட வேண்டிய நிலைக்கு தப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.