” தேசிய அரசமைப்பது தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். எனவே, அரசின் முயற்சி தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.” – என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த அரசில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தனக்கான பெறும்பான்மை பலம் இல்லாமல் போய்விடும் என்பதால் எதிரணி உறுப்பினர்களை வளைத்துப்போடவே தேசிய அரசமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

எனினும், தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அரசில் இணைய எதிரணிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. ” – என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.