நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு உரிய அனுபவம் இல்லை. அதனால்தான் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டை அமெரிக்காவுக்கு விற்பனை செய்கின்றது என பிரச்சாரம் முன்னெடுத்தனர். அதுமட்டுமல்ல இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று நாட்டு வளங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ” – என்றார் ருவான் விஜேவர்தன.

அதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.