சீனா இலங்கையின் மிக நெருங்கிய மற்றும் நம்பகர மானநட்பு நாடு என்று கருதப்படுகிறது. இருப்பினும், இருசாராருக்கும் இடையிலான உறவு, மேற்குலகு மற்றும் இந்தியா கவலைகளை எழுப்பும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையுடனான தனது உறவை மேலும் உறுதிப்படுத்தும் முயற்சியில் சீனாவுக்கு உள் நோக்கங்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கோஹண சீனாவுடனான இலங்கையின் உறவைப் நியாப்படுத்தியதுடன், சீனாவின் உரிமை மீறல்களை ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை பார்க்கவோ கேட்கவோ அல்லது இல்லை என்று கூறியுள்ளார்.பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

பேட்டி வருமாறு:

கேள்வி: நீங்கள் சமீபத்தில் சீனாவிற்கான இலங்கையின் தூதுவராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டீர்கள், முன்னைய அரசாங்கம் எடுத்த சில கொள்கை முடிவுகளை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இறுக்கமாகி இருந்தன. நீங்கள் பதவியேற்றதிலிருந்து அந்த உறவு எவ்வாறு மாற்ற்றமடைந்திருக்கிறது?

பதில்: அந்த உறவு இப்போது மிகச் சிறந்த நிலையில் உள்ளது என்று நான் கூறுவேன். ஆனால் நாங்கள் நாங்கள் உறவை இன்னும் வலுவாகவும் சுமுகமானதாகவும் மாற்றப் போகிறோம். சீனா நீண்ட காலமாக இலங்கையின் நல்ல நண்பராக இருந்து வருகிறது, ஆனால் ஒருபோதும் எதையும் எடுத்துக்கொள்வதில்லை. இது நான் நீண்ட காலத்திற்கு முன்பு கற்றுக்கொண்ட பாடம். எனவே, இந்த உறவை வலுப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், இந்த உறவை உயர் மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

கேள்வி: சீனாவுடனான உறவில் இலங்கை கவனம் செலுத்துகின்ற ஒரு விசேடமான பகுதி உள்ளதா?

பதில்: முதலாவதாக, இந்த உறவை பலப்படுத்துவதும் முன்னேற்றுவதும் எனது முதன்மையான இலக்காக இருக்கும். அது அரசியல் மட்டத்தில் இருக்கும். நிச்சயமாக, மிக முக்கியமாக,சமாந்தரமாக நாங்கள் எங்கள் இருதரப்பு பொருளாதார உறவை மேம்படுத்துவோம், சீனாவுக்கானஎ மது ஏற்றுமதியை மேம்படுத்துவோம், சீனா உலகின் மிக இலாபகரமான நுகர்வோர் சந்தையாக உள்ளது. சீனா உலகின் முக்கிய முதலீட்டு தலைநகரங்களில் ஒன்றாக இருப்பதால் சீன நிறுவனங்களின் உள் முதலீடுகளையும் நாங்கள் ஊக்குவிப்போம்.மேலும் சீனப் பயணிகள் இலங்கைக்குச் செல்வதற்கு ஊக்குவிப்பதற்கும் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இன்று உலகின் மிகப்பெரிய சுற்றுலா ஆதாரமாக சீனா உள்ளதுகோவிட் -19தொற்று நோய் பயணத்திற்கான உற்சாகத்தை குறைப்பதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் 169 மில்லியன் சீனர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தனர். கணிசமான எண்ணிக்கையிலான சீனப் பயணிகள் எதிர்காலத்தில் இலங்கையை தங்களின் வரையறுக்கப்பட்டதெரிவாக வாகக் கருதுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இந்த இலக்கை எட்டும்போதுஎந்தவொரு இடையூறை தடுத்து நிறுத்தவும் கதவுகளைத் திறந்து வைக்கவும் நாங்கள் நிச்சயமாகசகல முயற்சிகளையும் செய்வோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் சீனா மிகப்பெரிய மற்றும் அதிக இலாபகரமான சந்தையாகும்.

கேள்வி: சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில்பிரத்தியேகமான பங்குடமையை கருத்தில் கொள்வதற்கான நடவடிக்கை உள்ளதா?

பதில்: இரு தரப்பினரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றது என்பது உங்களுக்குத் தெரியும். சீனாவில் அதன் ஒரு தடயமும் இல்லை. இந்த பயங்கரமான தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இது ஒரு அற்புதமான வேலையைச் செய்தது. இலங்கை மிகவும் மோசமாக செய்யவில்லை. எனவே இரு நாடுகளும் பரஸ்பர அடிப்படையில் ஒரு பங்குடைமையை ஏற்பாடு செய்வதற்கான சகல சாத்தியமும் உள்ளது, நாங்கள் அதைப் பற்றி பேசுகிறோம்.

கேள்வி: தடுப்பூசி தொடர்பாக நீங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்கள் என்பது தெரியும். உங்கள் கருத்துகள்?

பதில்: இரண்டு முக்கிய சீன தடுப்பூசி உற்பத்தியாளர்களான சினோபார்ம் மற்றும் சினோவாக் ஆகியோருடன் பேசியுள்ளோம். சீன தடுப்பூசிகளை இலங்கைக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை இருசாரா ரும் மிகவும் ஏற்றுக்கொண்டனர். நாங்கள் சீன வெளியுறவு அமைச்சுடன் பேசியுள்ளோம், அவர்களிடமிருந்து மிகவும் சாதகமான பதிலைப் பெற்றுள்ளோம். சீன வர்த்தக அமைச்ச்சு டனும் பேசியுள்ளோம். வெளியுறவு அமைச்சு ,ஞாயிற்றுக்கிழமை இரவு சீனா இலங்கைக்கு 300,000 டோஸ் அன்பளிப்பாக கொடுக்கும் என்று எனக்குத் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் மேலும் 300,000 த்தை சேர்த்திருந்தனர். எனவே இதையெல்லாம் கொழும்புக்கு தெரிவித்திருந்தோம்.

கேள்வி: சீனாவும் இலங்கையுடன் ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்தள்ளுவதாக வும் நம்பப்படுகிறது , அம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற சில திட்டங்களை துரிதப்படுத்தவும் விரும்புவதாக நம்பப்படுகிறது . உங்கள் கருத்துகள் என்ன?

பதில்: இங்கே இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று சுதந்திரவர்த் தக உடன்படிக்கையுடன் தொடர்புடையது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் உள்ளது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக அல்லது அதற்கு மேற்பட்ட காலமாகசுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றி விவாதித்து வருகிறோம். சீன அதிகாரிகள் இதனை விரைவுபடுத்த விரும்புகிறார்கள், ஏனென்றால், எனது கருத்தின்பிர ரகாரம் இலங்கை ஏற்றுமதியாளர்கள் சீன சந்தையில் சிறப்பாக செயற்படாததற்கு என்பதற்கு ஒரு காரணம், சுதந்திர வர்த்தக உடன்படிக்கை போன்றதொன்று இல்லாததால் தான். இலங்கை சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொ லர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது, அதே நேரத்தில் சீனா 4 பில்லியன் அமெரிக்க டொ லர் மதிப்புள்ள பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தது.

நீங்கள் எழுப்பிய மற்றைய பிரச்சினை அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தைப் பற்றியது. இரண்டும் சீன நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டவை . தற்போது நாம் அம்பாந்தோட்டை வழங்கும் வசதிகளையும், கொழும்பு துறைமுக நகரம் வழங்கும் முதலீட்டாளர்களையும் ஈர்க்க வேண்டும். இதற்காக, இரு பகுதிகளும் சீனர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எவருக்கும் திறந்திருக்கும் என்று நாங்கள் கூறியுள்ளோம். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா அல்லது ஜப்பானில் இருந்து எவரும் வந்து இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனது வேலை, நிச்சயமாக சீன நிறுவனங்களை இந்த பகுதிகளில் முயற்சித்து முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகும். எங்களுக்கு அந்த முதலீடுகள் தேவை. இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, இலங்கைக்கு ஒரு வெளிநாட்டு நேரடி முதலீடு முக்கியமானது, இரண்டாவதாக ஒருவெளிநாட்டு நேரடி முதலீடு எ மது பொருளாதாரத்தையும், எ மது மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும், இந்த நாட்டின் ஏற்றுமதித் திறனையும் தூண்டும்.

கேள்வி: இலங்கையுடனான சீனாவின் வர்த்தக பரிவர்த்தனைகள் குறித்து சில நாடுகள்கவலை கொண்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் இதை ஒருபக்கமானதாக ப் பார்க்கிறார்கள், சீனாவுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகபார்க்கிறார்கள் , மற்றவர்கள் இந்த ஒப்பந்தங்களில் சிலவற்றின் வெளிப்படைத்தன்மை இல்லாததைபற்றி கேள்வி எழுப்புகிறார்கள். அந்த கவலைகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

பதில்: சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளின் அடிப்படையில் இலங்கையின் தேவைகளுக்கு பதிலளிப்பதாக நான் நினைக்கிறேன். இலங்கைக்கு ஒரு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட வேண்டும், எங்களுக்கு நிதி தேவைப்படும்போது, அது ஒரு சீன நிறுவனமாகும், இது நிதியுதவியுடன் வருவதோடு, நிதியை அகற்றுவதற்கு தேவையான கட்டமைப்பையும் கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் அல்லது வேறு எந்த அரசாங்கமும் சீன நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளது என்று நான் நினைக்கவில்லை. போட்டி இருந்திருந்தால், மற்றவர்கள் களத்தில் இறங்கினால், வேறு எந்த நாட்டிலிருந்தும் நிறுவனங்களை விலக்க வேண்டுமென்றே முயற்சி இருப்பதாக நான் நினைக்கவில்லை. வாய்ப்புகள் இருந்தன, சீன நிறுவனங்கள் வந்து அந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டன.சீன சந்தைக்கான அணுகலில், சீன சந்தை வேறு எந்த சந்தையையும் விட தாராளமயமாக்கப்பட்டுள்ளது என்றும் அது அனைவருக்கும் திறந்திருக்கும் என்றும் சீனா தொடர்ந்து கூறியுள்ளது. சீனாவில் வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை தயாரிப்புகளை பயன்படுத்தாதற்காக சீனர்களை நீங்கள் குறை கூற முடியாது. அவர்களுக்குத் தேவையான தரம், அவற்றின் சுங்க விதிமுறைகள் போன்றவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: மேற்கு நாடுகளின் அழுத்தம் சீனாவுடனான அதன் உறவிலிருந்து அதிகமானவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளைத் தடுக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: வெளிப்படையாக, அழுத்தம் உள்ளது. இலங்கையின் மீது மட்டுமல்ல, பல நாடுகளின்மீதும் உள்ளது.. வளர்ந்துவரும் நாடுகள் சீனாவுடன் நெருங்குவதைஊக்கமிழக்க செய்யும் முயற்சி உள்ளது. ஆனால் எ மது எதிர்காலம் நஎம்முடையதாகும். எமக்கு எது நல்லது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். எ மது எதிர்காலத்தை சிறப்பாகச் செய்ய நாம் யாரை நம்பியிருக்க வேண்டும் என்பதில் எம் சொந்த எண்ணப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இலங்கைக்கு பதிலளிக்க வேண்டிய மிக முக்கியமான அழுத்தம், ஒரு நல்ல வாழ்க்கை, சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் ஆகியவற்றிற்காக எமது மக்களிடமிருந்து வரும் அழுத்தமாகும்.

கேள்வி: மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டை சீனா எதிர்கொள்கிறது, குறிப்பாக உய்குர்கள். நீங்கள் சீனாவில் களத்தில் இருக்கிறீர்கள். இந்த முறைகேடுகள் நடப்பதை நீங்கள் பார்த்தீர்களா அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பதில்: எனக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. ஆனால் நான் எனது சகாக்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், நான் பேசியவர்களிடையே அதிக கவலை இருப்பதாகத் தெரியவில்லை. இதில் சில ஐரோப்பிய இராஜதந்திரிகள் மற்றும் பல மத்திய ஆசிய தூதுவர்கள் உள்ளனர்.இலங்கையில் போலவே , வேறு சில நாடுகளும் பிரச்சினைகள் இல்லாத இடங்களில் பிரச்சினைகளை எழுப்ப முயற்சிக்கின்றன. எந்த குழப்பமும் இல்லாத இடத்தில் குழப்பத்தை உருவாக்கி, சர்வதேச அளவில் இலங்கையை சங்கடப்படுத்துகின்றனர்.. இது ஒரு அரசியல் முயற்சி. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். உய்குர் (Uyghur) பிரச்சினை என்று அழைக்கப்படுபவையும் இதேதான் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: நீங்கள் ஒரு காலத்தில் வெளியுறவு செயலாளராக இருந்துள்ளீர்கள் . உங்களிடம் பல குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகள் எழுப்பப்படும் போது, இலங்கை சீனா மற்றும் மேற்கு நாடுகளுடனான உறவை எவ்வாறு இலங்கை சமன் செய்கிறது?

பதில்: அங்குதான் இராஜதந்திரம் நடைமுறைக்கு வருகிறது என்று நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில் இலங்கை தனித்துவமானது அல்ல. வெவ்வேறு திசைகளில் இருந்து அழுத்தத்திற்கு உட்படும் பிற நாடுகளும் உள்ளன. எமது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த அழுத்தங்களை சமநிலைப்படுத்துவது எமக்குரியதாகும். முடிவில், ஒரு நாடாக நாம் பிழைக்க வேண்டும், வளர வேண்டும், முன்னேற வேண்டும். மேற்கு நாடுகளுக்கு அதன் சொந்த முன்னுரிமைகள் இருக்கும். 300-400 ஆண்டுகளாக சில மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முயன்றமை உங்களுக்குத் தெரியும். பிரிட்டன் உண்மையில் 133 ஆண்டுகளாக முழு தீவிலும் ஆதிக்கம் செலுத்தியது.

கேள்வி: ஆனால், சீனா எ ம்மீது இத்தகைய பிடியை வைத்திருப்பதால், பிரிட்டனைப் போலவே சீனாவும் நம்மை ஆளக்கூடிய சூழ்நிலைக்கு வரக்கூடும் என்பது கவலைக்குரிய விட யமல்லவா?

பதில்: இது ஒரு வேடிக்கையான வாதம். எங்களுக்கு முதலீடுகள் தேவை. நாட்டை முன்னேற்ற வேண்டும். நாம் செழிபடைய வேண்டும். எமது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். மேற்கு நாடுகளிடமிருந்து முதலீடுகளை கேட்டுள்ளோம். மற்ற நாடுகளிடமிருந்து முதலீடுகளை கேட்டுள்ளோம். அவர்கள் வராதபோது போது, சீனர்கள் வரும்பும் போது, நாங்கள் ஏன் அதை விமர்சிக்கிறோம்? மற்றவர்கள் முகத்தைத் திருப்பும்போது சீனர்கள் காலடி எடுத்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.

கேள்வி: எதிர்காலத்தில் இலங்கையில் சீன நிதியுதவியுடனான பாரிய திட்டங்களை எதிர்பார்க்கிறோமா ?

பதில்: நாங்கள் பல திட்டங்களில் பணியாற்றி வருகிறோம். இந்த கட்டத்தில் அவர்களைப் பற்றி பேசலாம் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் பல திட்டங்களில் பணியாற்றி வருகிறோம். ஐரோப்பா மற்றும் இந்தியாவிலிருந்து பெரிய நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம். முதலீட்டாளர்களுக்கு இலங்கை இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.