” நாட்டு மக்கள் தற்போதுதான் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துள்ளனர்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை 1991 இல் இந்தியாவில் ஏற்பட்டது. அப்போது நிதி அமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். அவர் பொருளாதார விஞ்ஞானத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர். நெருக்கடி நிலைமையை சரிவர சமாளித்தார்.

ஆனால் எமது நாட்டில் பொருளாதார விஞ்ஞானம் தெரிந்தவர்களிடம் நிதி அமைச்சு கையளிக்கப்படவில்லை. அந்த அமைச்சு பதவி ஜனாதிபதி வசமே இருந்தது. நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இதுவும் ஓர் காரணமாகும்.

எமது கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது அவரை எல்லோரும் திட்டினர். விமர்சித்தனர். ஆனால் இன்று அவரின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துள்ளனர்.” – என்றார்.