இன்றளவில் படுமோசமான அந்நியசெலாவணி நெருக்கடியை நாடு எதிர்நோக்கி இருக்கையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக்கொள்வதற்காக வாஷிங்டன் நகரத்தை நோக்கிச் சென்ற நிதி அமைச்சர் மொஹமட் அலி சப்றி, மேற்படி அமைச்சு செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன,   மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை உள்ளிட்ட 08 பேர் உள்ளடங்கிய  குழுவினர் விரயமிக்க செலவுகளை செய்துவருவதாக தன்னை ஒரு தூதரக உத்தியோகத்தராக அறிவிக்கின்ற நந்தன அபேசிங்க  என்பவர் வெளிப்படுத்தியுள்ளார். 

அவர் தனது முகநூலில் குறிப்புப் பதிந்து தூதரகங்களில் உத்தியோகபூர்வ வாகனங்கள் இருக்கையில் ஏறக்குறைய 8000 டொலர்களை செலவிட்டு இரண்டு வாடகை லிமோசின் பெறப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளார். மேற்படி முகநூல் குறிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.