நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு எதிர் நோக்கும் அனைத்து பிரச்சினைக்கும் மூல கார்த்தா பஷில் ராஜபக்ஷவே காரணம் . ஏழு மூளை கொண்ட பஷில் என்று பலறாலும்பேசப்பட்டவர், இவர் ஒரு மூளையாவது சாரியாக , பயன்
படுத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இனவாத சாபக்கேட்டை இல்லாதொழிப்போம் – மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, வாகனம் ஓட பெற்றோல் இல்லை, நாட்டில் மின்சாரம் இல்லை, பிள்ளைகள் குடிக்க பால்மா இல்லை, குழந்தைகள் படிக்க கரண்ட் இல்லை, பரீட்சை இல்லை, கொள்ளை பணம் எங்க, அடுப்பு மூட்ட கேஸ் இல்லை, நாட்டில் எதுவுமில்லை, பசில் வேண்டாம், மஹிந்த வேண்டாம், கோத்தாவே வெளியேறு, நாட்டில் எதுவுமில்லை மக்களுக்கு பசி, பசளை தா, பெற்றோல் தா, பசிலே வெளியேறு, அரசே வீட்ட போ, கோ கோம் கோத்தா, போன்ற கோசங்களையிட்டவாறு நாளுக்கு நாள் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்டி காத்து வந்த நற்பெயரும் அழிந்து விட்டது. பஷில் ராஜபக்ச கண்ட ஜனாதிபதி கனவும் இனி சரிப்பட்டு வராது. இலங்கையில் இருந்து பெட்டியை கட்டி நிரந்தரமாக அமெரிக்காவில் குடியமர்வதற்கு வழிவகுத்தவர்கள் விமல் தலைமையிலான 11 கட்சியே காரணம்.

பஷில் ராஜபக்சவின் கதையை கேட்டு விமல் தலைமையிலான 11 கட்சியை எப்போது வெளியே போட்டாறோ அன்றே பிடித்தது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏழரை சனியன். இச்சனியன் ராஜபக்ச குடும்பத்தை துரத்தும் வரை ஓயாது போல் தெரிகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம்.