முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாளை (12) அல்லது நாளை மறுதினம் (13) பிரதமராக பதவியேற்கவுள்ளார் என கொழும்பு்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்த நிலையில் நாளை (12) காலையும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பகுதியினர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஏற்கெனவே தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைந்திருங்கள்