பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 53 உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளது.
11 கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கொழும்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது
இதற்கமைய, முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ ஆகியோரது பெயர்களை பிரதமர் பதவிக்காக முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்