முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

மேலும் சுவாசக் கோளாறு காரணமாக அவர், வைத்தியசாலையிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.