ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதுடன், அது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
ஐ.ம.ச முக்கிய உறுப்பினர்களை நேற்று முன்தினம் சந்தித்து ரணில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்கள் பாராளுமன்றத்தில் ரணில் அணியாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
ரணில் அணியில் ஐ.ம.சக்தியின் 25 உறுப்பினர்கள் அடங்குகின்றனர். அதில், 11 சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர் என ஐ.தே.க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஹரின் பெர்னாண்டோவுடன் நெருக்கமான தரப்பொன்றும், கபீர் ஹசீம், அசோக அபேசிங்க, தலதா அதுகோரல உள்ளிட்ட சிலருடன் இவ்வாறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான சுயாதீன அணியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
இணைந்திருங்கள்