வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நாளை பங்களாதேஷிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்து சமுத்திர ஒழுங்கமைப்பு சங்கத்தின் 21ஆவது அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவரது விஜயம் அமையவுள்ளது.
நாளைய தினம் முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பங்களாதேஸில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையில் இந்து சமுத்திர ஒழுங்கமைப்பு சங்கத்தின் உப தலைவர் பதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இணைந்திருங்கள்