இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நடத்தப்படும் தொடர் போராட்டங்கள் காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9-ம் திகதியன்று பதவிவிலகியிருந்தாா்.
இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு கலவரம் முண்டதில் 9 பேர் பலியாகியதுடன். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சா்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது

இதையடுத்து மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் திருகோணாமலை கடற்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்தநிலையில் அண்மையில் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு சென்று ர நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.


இதனிடையே நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்ற காவல்துறையினரால் வன்முறையை தூண்டி விட்டதாக மகிந்த ராஜபக்ச உள்பட 7 பேர் மீது கொழும்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச உள்பட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் குறித்த வன்முறை குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்தி வரும் காவல்துறையினரிடம் எந்த நேரத்திலும் தான் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாக தொிவித்துள்ளாா்.