இந்த வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் தகவல்களுக்கு அமைய, 2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 105,821 பேர் தொழில் வாய்ப்புக்களைத் தேடி, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 286 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021 முதல் ஐந்து மாதங்களில் 27,360 பேர் வேலை வாய்ப்பிற்காக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்,  அந்த எண்ணிக்கை இந்த வருடம் மூன்று மடங்காக அதிகரித்து 78,461 ஆக பதிவாகியுள்ளது. 

அதிக எண்ணிக்கையிலானவர்கள், அதாவது 19,133 பேர் கட்டார் நோக்கி பயணித்துள்ளனர். 

12,701 இலங்கையர்கள் குவைட்டிற்கும், 11,000 பேர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், 1,754 பேர் தென் கொரியாவுக்கும் சென்றுள்ளனர்.