2019 ஆம் ஆண்டு இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நிலையை முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட தகவலுக்கு அமைய ஒரு இராத்தல் பாண் 50 ரூபாயில் காணப்பட்டது. இந்த விலை 74 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது 2019 ஆம் ஆண்டில் என சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் எரிவாயு சிலிண்டனர் ஒன்று 1350 ரூபாய், ஒரு மூட்டை சீமெந்து 850 ரூபாய், ஒரு லீட்டர் டீசல் 120 ரூபாய், ஒரு லீட்டர் பெட்ரோல் 140 ரூபாய், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 12 ரூபாய்க்கு காணப்பட்டது.
முச்சக்கர வண்டியின் முதல் கிலோ மீற்றர் கட்டணம் 50 ரூபாய்க்கு காணப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஒரு பக்கட் பால் 30 ரூபாவுக்கும், 400 கிராம் பால் மா பக்கட் 320 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ கிராம் 115 ரூபாய்க்கு, அரிசி ஒரு கிலோ கிராம் 100 ரூபாய்க்கும் காணப்பட்டது.
அப்படி என்றால் இது 74 வருட பிரச்சினை அல்ல. 2019 ஆம் ஆண்டு ஊடகத்தில் பிரபல கதாபாத்திரமாக இருந்தவருக்கு அடையாளமிட்டதன் முட்டாள் தனத்தினால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகும்” என அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
இணைந்திருங்கள்