புத்தபெருமானிடம் பிரார்த்தனை செய்து நாட்டைக் காப்பாற்றுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என அஸ்கிரிய பீடத்தின் தலைவர் அதிவணக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள முறைமையின் கீழ் நாடு தொடர்ந்தால் நாடு அதள பாதாளத்திற்கு செல்லும் என மகாசங்கத்தினர் தொடர்ந்து கூறி வந்த போதிலும் ஆட்சியாளர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மகா சங்கத்தினரின் அறிவுரைகளை புறக்கணித்த காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்யக்கூடாதவற்றை உபதேசிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த மகா சங்கரத்தினருக்கு இப்போது பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மகாசங்கரத்தினரின் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தியதன் காரணமாகவே நாடும் மக்களும் இவ்வாறான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி – மடவளை ஸ்ரீ ஜினமங்கலாராமதிப லியன்வல சாசனரதன அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், இன்று நாட்டில் நிலவும் நிலைமையை ஒரு சிறு பிள்ளை கூட புரிந்து கொள்வதாகவும், படித்தவர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும்பான்மையான மக்கள் அதீதமான போக்கில் செயற்படுகின்ற வேளையில் மிகச் சிலரே தங்களின் குறுகிய கருத்துக்களைக் களைந்து நல்லது கெட்டதை சரியாக எடுத்துச் செயற்படுகின்றனர்.
மக்கள் ஆழ்ந்த அச்சத்தில் இருப்பதாகவும், கடவுள் நாட்டைக் காப்பார் என்பதைத் தவிர வேறு எந்த நம்பிக்கையும் இல்லை என்றும் பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அன்னிய படையெடுப்புகளை எதிர்கொண்டாலும், கடவுளின் ஆசியும், உதவியும் நாடு பெற்றதாலேயே அன்று முதல் இன்று வரை நாடு பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், நாளை நாட்டின் பாதுகாப்பும் அவ்வாறே உறுதிப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இணைந்திருங்கள்