ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தலைமறைவான ஜனாதிபதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று ஆளும் கட்சி உறுப்பினருக்கே ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு கொண்டு செல்வதற்கு ஒரே வழி ஊடகங்களே ஆகும். ஆனால் இன்று ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்காமல் பறிப்பதன் மூலம் அந்த வாய்ப்பையும் இல்லாமல் செய்வதாக சந்திம வீரகொடி குற்றம் சுமத்தியுள்ளார்.