நாட்டின் சில பகுதிகளில் துல் ஹஜ் மாத தலைப்பிறை இன்று தென்பட்டுள்ளமையினால், எதிர்வரும் 10 ஆம் திகதி ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று நடைபெற்றது.

இதன்போது, நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தது.