(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிப்பதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தந்திரமான முறையில் செயற்பட்டதன் விளைவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ தற்போது எதிர்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி உட்பட பிரதமர் நாகரீகமான முறையில் பதவி விலக வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கமைய இவ்வார காலத்துக்குள் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முறையற்ற வகையில் பிரதமர் பதவியைபொறுப்பேற்காமலிருந்திருந்தால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இல்லாதொழித்தார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் அழுத்தமாக வலியுறுத்துள்ளார்கள்.

ஜனநாயக ரீதியிலான அமைதி வழி போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை தீக்கிரையாக்கியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.