மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர எதிர்க்கட்சிகளின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று சர்வகட்சி ஆட்சியை அமைப்பதற்கு பொதுவான உடன்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தை விரைவாக அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கையை 10 ஆக மட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசாங்கத்தில் இணையும் எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்காது மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் உள்ளடக்கிய தேசிய தலைமைத்துவ சபை நிறுவப்படும்.
இந்த சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய நிபுணர் குழுவொன்றும் நிறுவப்படும் மற்றும் அது கல்வியாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைக் கொண்டதாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இணைந்திருங்கள்