ரஷ்யா மீதான SWIFT தடையினால் ஏற்படும் வர்த்தகச் சிக்கல்கள் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக, இலங்கை மத்திய வங்கி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு SWIFT தளத்தைப் பயன்படுத்துகிறது. எனினும், உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்ய வங்கிகள் SWIFT அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா மீதான தடையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல் | No Chance Of Getting Fuel From Russia

இந்நிலைமை காரணமாக ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை நடைமுறைப்படுத்துவது கடினம் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான பற்றாக்குறை காரணமாக ரஷ்ய நாணயமான ‘ரூபிள்’ பயன்படுத்தி எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை இலங்கை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரூபிள் செலுத்துவது போன்ற மாற்று சூழ்நிலைக்கு செல்லலாம்

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தற்போதுள்ள தெரிவுகளை நடைமுறைப்படுத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேவைப்பட்டால், ரூபிள் செலுத்துவது போன்ற மாற்று சூழ்நிலைக்கு செல்லலாம்.

ரஷ்யா மீதான தடையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல் | No Chance Of Getting Fuel From Russia

அங்கு நாங்கள் எங்கள் தேயிலைக்கு ரூபிள் வாங்கி ரஷ்ய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து அதன் மூலம் எரிபொருளுக்கு செலுத்தலாம். ஆனால் அதற்கு ஈடாக நாம் செலுத்த வேண்டிய தொகை ரஷ்யன் இறக்குமதி நாம் தேயிலை மூலம் சம்பாதிக்கும் தொகையை விட அதிகமாக உள்ளது.

எனவே, வர்த்தக பற்றாக்குறை காரணமாக இந்த முறையும் நடைமுறையில் இல்லை. தேவைப்பட்டால், ரஷ்யாவுடன் வேறு வழிகளில் ஒப்பந்தம் செய்யும் சீனா போன்ற நாடு மூலம் எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்தலாம். ஆனால் அதில் சீனாவும் ஈடுபட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.