நாட்டில் தற்போது நிலவும் நிலைமைக்கமைய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டத்தை நீடிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்ழைக விடுத்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாட்டை கடுமையான முறையில் அமுல்படுத்தவில்லை என்றாலும் தற்போது உள்ள முறையிலாவது 18ஆம் திகதி வரை நடத்தி செல்வது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இணைந்திருங்கள்