இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் சிறிது நேரத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு அவர் தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை மாலைதீவுக்கு தப்பிச் சென்றிருந்தார். அங்கேயும் அவரருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், நேற்று இரவு சிங்கப்பூருக்கு செல்லவிருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றை மாலைதீவு அரசாங்கத்திடம் கோட்டாபய ராஜபக்ச கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது தனியார் ஜெட் விமானம் மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு அவர் சிங்கப்பூர் செல்லவிருப்பதாகவும் மாலைதீவு ஊடகவியலாளர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணைந்திருங்கள்