சவூதி பட்டத்து இளவரசரை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் முதல் நாடாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த 6-ம் திகதி இஸ்ரேல் வந்தடைந்தார்.

இஸ்ரேலில் 3 நாள் பயணத்தை முடித்து பைடன் நேற்று சவூதி அரேபியா புறப்பட்டார்.

சவூதி அரேபியாவின் ஜீடா நகருக்கு பைடன் சென்றடைந்தார். அவருக்கு அரசுமுறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்தார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சவூதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் முஹம்மது பின் சல்மான் மற்றும் ஜோ பைடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் முஹம்மது பின் சல்மானை ஜோ பைடன் சந்தித்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.