கனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மணிடோபாவை சேர்ந்த 36 வயது பெண்ணான டொரீன் ஹெட் கடந்த 19ஆம் திகதி காணாமல் போனார். அவரின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த பொலிசார் டொரீன் 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் 119 பவுண்டுகள் எடை கொண்டவர் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் டொரீன் இரு தினங்களுக்கு முன்னர் Saskatchewanல் உள்ள ஆற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சடலம் ஒன்று அங்கு இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்த நிலையில் அங்கு சென்ற போது உயிரிழந்தது டொரீன் தான் என உறுதி செய்யப்பட்டது.

இந்த மரணத்தை பார்த்தால் குற்றபின்னணி கொண்டதாக தெரியவில்லை என கூறியுள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.