முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலி முகத்திடல் மைதானத்தில் இருந்து போராட்டக்காரர்களை அகற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாக டிவ் குணசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவரின் செல்வாக்கு காரணமாக அப்போது ஜனாதிபதி இருந்த கோட்டாபய ராஜபக்ஷவால் அதைச் செய்ய முடியவில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

காலி முகத்திடல் பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் வெளியேற்ற முற்பட்ட போது, ​​அமெரிக்கத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்து அதனைத் தடுத்ததாக அவர் மேலும் கூறுகிறார்.

இந்த நாட்டின் இறையாண்மை வேறொரு நாட்டில் தங்கியிருப்பதாகவும், இன்று காலை தாக்குதல் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்க தூதுவரிடம் அனுமதி பெற்றிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.