மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் 202 ஆவது ஆண்டு நிறைவையொட்டி “வின்வோக் – 202” எனும் பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை நடைபெறவுள்ளதாக பாடசாலையின் அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் பழமையானதும் புகழ் பூத்த மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையானது தனது 202 ஆண்டு நிறைவைக் சிறப்பிக்குமாக வின்வோக் (Vin walk) எனும் பவனி இன்று காலை 7.00 மணியளவில் பாடசாலையிலிருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு நகர்புறம் வரை சென்று பாடசாலைக்கு மீண்டும் வந்து பவனி நிறைவுபெறவுள்ளது.
இப்பவனியில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கலந்துகொள்கின்றார்கள்.
இப்பாடசாலை தின நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் கௌரவ அதிதியாகவும் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு இத்தினத்தை சிறப்பாக கொண்டாடவுள்ளார்கள்.
பாடசாலையின் பாரம்பரியம், பெருமைகள், சாதனைகள் என்பனவற்றோடு சமூகத்தின் தேவைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் இப்பவனி அமைவுள்ளதுடன் சூழல் நேயமிக்கதாக இப்பவனி அமையப்பெறவுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
இணைந்திருங்கள்