ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடல் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மகிந்த ராஜபக்சவும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன