மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்துள்ள 16ஆவது ருக்மணி அம்மா ஞாபகார்த்த மென்பந்து நொக்–அவுட் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு நற்பணியாகவே இந்த நொக் அவுட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருவதாக மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விளையாட்டுத்துறை பொறுப்பதிகாரி வீரன் இராமராஜ் தெரிவித்தார்.

இப் போட்டியின் மூலம் பெறப்படும் முழு நிதியும் மலையக கல்வி மேம்பாட்டிற்கு நேரடியாக சென்றடையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நொக் அவுட் கிரிக்கெட் போட்டியில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை மாத்திரம் உள்ளடக்கிய 40 அணிகள் 4 குழுக்களில் விளையாடவுள்ளன. இப் போட்டிக்கு தேவி ஜுவலர்ஸ், ரவி ஜுவலர்ஸ், சரிட்டா ஜுவெலரி, சுஸி மெகா குளோதிங் ஸ்டோர், ரொபின்சன் பிறைவேட் லிமிட்டெட், ஸ்ரீ விஜயாஸ், அம்மா புட் சிட்டி, சரோ நிறுவனம் ஆகியன அனுசரணை வழங்குகின்றன.