ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மருந்துகளை பயன்படுத்துபவர்களின் மூளை செல்கள் சிதைந்து அழிந்து விடுவதாக வைத்தியர்கள் குறிப்பிட்டதாக அமைச்சர் கூறினார். அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் திருத்தச் சட்டத்தில் ஐஸ் உள்ளிட்ட புதிய வகை மருந்துகளும் சேர்க்கப்படும் என்றும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இணைந்திருங்கள்