தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலங்கள் நடிப்புக்கு பிரேக் எடுத்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த வருடம் உடன்பிறப்பே திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது ஒரு மலையாளம் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மம்முட்டி நடிக்கும் அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். இதற்கு முன்னதாக ஜோதிகா சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
ஆனால் மம்முட்டி இந்த கதாபாத்திரத்திற்கு ஜோதிகா தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் நடிக்கும் படி கேட்டுக் கொண்டார். அதனாலேயே ஜோதிகா மற்ற திரைப்படங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தார். தற்போது அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
காதல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டர் பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கிறது. அதில் ஜோதிகா, மம்முட்டி இருவரும் எதையோ பார்த்து அழகாக சிரிப்பது போன்று அந்த போஸ்டர் இருக்கிறது. அதில் படத்தின் தலைப்பு காதல் என்ற வார்த்தையும் கவிதை போன்ற அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சூர்யா ஜோதிகா இருவரும் சென்ற போட்டோ ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கப் போகும் ஜோதிகா இந்த படத்தின் மூலம் நிச்சயம் தேசிய விருது பெறுவார் என்று பட குழுவினர் இப்போதே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவருக்கு இந்த படத்தில் ஒரு கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைப்புக்கு ஏற்றவாறு படமும் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இணைந்திருங்கள்