சீனாவின் உகான் நகரில்  கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.   கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.  

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.70-கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.12- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமாா் 1,92,42,586 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,159 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.