கடூழிய சிறைத் தண்டனைக்குட்பட்டவர்களை வைத்துள்ள பூஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலைக்குள்ளிருந்து ஐந்து கையடக்க தொலைபேசிகள், சார்ஜர்கள் மற்றும் ஐந்து சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறைச்சாலையின் விசேட பிரிவின் நுழைவாயிலுக்கு அருகாமையில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்துள்ளநிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பூஸா சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.