சமையல் எரிவாயு சிலிண்டர்களால் ஏற்படும் வெடிப்பினைப் போன்று அரசாங்கமும் வெடித்துச் சிதறாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஆளுந்தரப்பின் பிரதான கட்சியுடையதாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சமையல் எரிவாயு சிலிண்டர் சர்ச்சையால் துரதிஷ்டவசமான சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்கள் மிகவும் கவலைக்குரியவையாகும். குறுகிய காலத்திற்குள் இதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று நாமும் வலியுறுத்துகின்றோம். நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்படக் கூடும். எனவே அதனை இறக்குமதி செய்வதற்கான பொறுப்பையும் அந்த நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இணைந்திருங்கள்