2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் 3 ஆம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) நவம்பர் 14 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 15 ஆம் திகதி முதல் நவம்பர் (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 2 ஆம் வாசிப்பு மேலதிக 37 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.
நவம்பர் (23) முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 08 ஆம் திகதி அதாவது இன்று வரை விவாதம் இடம்பெறும்.
இன்று மாலை 6.45 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி 2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டது.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்