இஸ்லாமியக் கருத்துகளை, நெறிகளை அச்சமூக மக்களுக்குப் பரப்பி வரும் தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு திடீரெனத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தீவிரவாதத்தின் வாயில்களில் ஒன்று என சவுதி அரேபிய அரசு தப்லீக் ஜமாத் அமைப்பைக் குறிப்பிட்டுள்ளது

உலகெங்கும் பல நாடுகளில் இருக்கும் தப்லீக் ஜமாத் அமைப்புக்குப் பெரும்பாலும் சவுதி அரேபியா நாடுகளில் இருந்துதான் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்படுகின்ற நிலையில் சவுதி அரசின் இந்த நடவடிக்கை உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சவுதி அரேபியாவைப் பின்பற்றி ஏனைய இஸ்லாமிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, பங்களாதேஸ் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் தடை விதிக்கப்போகின்றனவா அங்குள்ள தப்லீக் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனும் கேள்விகள் எழுந்துள்ளன.

சவுதி அரேபிய அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு வெிளிட்டுள்ள ருவிட்டா் பதிவில்

, “டாக்டர் அப்துல் லத்தீப் அல் அல்ஷேக், மசூதிகளில் உள்ள போதனை செய்பவர்களுக்கும், மசூதிகளுக்கும் பிறப்பித்த உத்தரவில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அல் அஹ்பாப் எனச் சொல்லப்படும் தப்லிக் மற்றும் தவா குழுவுடன் மக்கள் பழகுவதை எச்சரியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சமூகத்துக்கு தப்லீக் ஜமாத்தால் ஆபத்து இருப்பதால், மசூதிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். தவறான வழிகாட்டல், தடம் மாறுதல், ஆபத்து போன்றவை இந்தக் குழுவால் இருக்கிறது. தீவிரவாதத்தின் வாயில்களில் ஒன்றாக இக்குழு இருக்கிறது. சமூகத்துக்கு ஆபத்தான குழுவாக இருப்பதால், தப்லீக் தவா குழுவை சவுதி அரசு தடை செய்கிறது “ என த்தெரிவித்துள்ளது.

இஸ்லாத்தில் சன்னி பிரிவைச் சேர்ந்த அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்பு இஸ்லாமியக் கருத்துகளை அந்தச் சமூக மக்களுக்குப் போதித்து அவர்கள் எவ்வாறு இஸ்லாத்தின் பாதையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என அறிவுறுத்தும் அமைப்பாகும்.