உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.