மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இதேவேளை, உலகச் சந்தையில் WTI ரக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 1.43% குறைந்துள்ளது.
தற்போது ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 77.16 டாலராக உள்ளது.
மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 81.13 டாலராக உள்ளது, இது 1.51% குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், இந்நாட்டு மக்கள் உணரும் தாக்கத்துடன் எரிபொருள் விலை குறைக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்