பழிவாங்குதலை பிரகடனப்படுத்துகின்ற சிவப்புக் கொடியை ஈரனிலுள்ள ஜம்கறாம் பற்றிவாசலில் பறக்கவிட்டுள்ளது ஈரான்.

உலகிலுள்ள பிரபல்யமான மதஸ்தலங்களுள் ஒன்றான் ஜமகறாம் பள்ளிவாசலில் சிவப்புகொடியைப் பறக்கவிடுவது என்பது, இரத்தம் சிந்தப்படுவதற்கான அடையாளமாகவும்,  இரத்தப்பழியைத் தீர்பதற்கான ஒரு அடையாளமுமாகவே நீண்டகாலமாகப் பார்க்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில், ‘ஹமாஸ் தலைவர் இஸ்மயில் ஹணியே ஈரான் தலைநகர் டெகரானில் வைத்து இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது கடுமையான பதில்தாக்குதல் மேற்கொள்ளப்படும்’ என்பதற்கான அடையாளமாகவே, ஜம்கறாம் பற்றிவாசலில் சிவப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ஈரானிய ஊடகவியலாளர்கள்.

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் பற்றி ஈரானில் இருந்தும், ஈரானின் துணை இராணுவக் குழுக்களிடம் இருந்தும் வெளிப்படுகின்ற எச்சரிக்கைகளும், பிரகடனங்களும், ஒரு மிகப் பெரிய யுத்தம் மத்தியகிழக்கில் மூழப்போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாகவே இருக்கின்றது.