இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மொனராகல நாமல்ஓய மற்றும் இங்கினியாகல பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இவ்வாறு நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு
அம்பாறை நாமல்ஓய பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சக உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தானும் துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இங்கினியாகல நெல்லியத்த பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
54 வயதான பெண் ஒருவரும், அவரது 17 வயதான மகளும் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர், உயிரிழந்த ஏனைய மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்