எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக அமெரிக்கா,நெதர்லாந்து,இஸ்ரேல் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கான தபால் ஏற்றுமதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு அஞ்சல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
போதுமான எரிபொருளை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் தபால் போக்குவரத்து நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்