ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படாத நிலையில் இழுபறியில் தமிழ் பொது வேட்பாளர் தெரிவு உள்ளது.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் உள்ளதனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
மதியம் ஒரு மணியளவில் ஆரம்பமான கூட்டம் மாலை 5 மணி வரையிலான சுமார் 04 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் இடம்பெற்ற நிலையில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் சந்திப்பு நிறைவுற்றுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் தமிழ் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இணைந்திருங்கள்