ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவின் வாக்குச் சீட்டு குறித்த இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள், வாக்குச் சின்னம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேற்று இரவு விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பல அரசியல் குழுக்கள் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசன்ன ஷியாமல் செனரத் தெரிவித்துள்ளார்.

ரணிலின் தேர்தல் சின்னம்  

எனினும் ஜனாதிபதி இதய சின்னத்தில் போட்டியிடத் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தேர்தல் குறிப்பில் குறித்த சின்னம் இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே கூறியிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | President Election Ranil In Stuggle

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் குறிப்பை அறிவித்துள்ளது.

அரசியல் கட்சி

அதற்கமைய, அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் எண்ணிக்கை 84 ஆகும். அத்துடன், அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத 115 அடையாளங்களும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.