அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சிறிலங்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை  மேற்கொண்டுள்ளார்.

நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, சிறிலங்கா அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ வரவேற்றார்.

அவர் பெப்ரவரி 18 ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து, அரசாங்கத் தலைவர்களையும் முக்கிய பங்குதாரர்களையும் சந்திக்கவுள்ளார்.

டிட்வா சூறாவளியின்  பாதிப்புகள் குறித்தும்,  அதன் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் நேரடியாக ஆராயவுள்ளார்.

அத்துடன், சிறிலங்காவுக்கு மிகவும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, உதவும் வழிகள் குறித்தும் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.