டோக்கியோவில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களது உத்தியோகபூர்வ ஆடை குறித்து, விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இலங்கைஒலிம்பிக் குழாமிடம் அறிக்கை ஒன்றினை கோரியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஐப்பானிற்கு சென்ற இலங்கைவீரர் ஒருவர் தனதுபோட்டி இலக்கத்தை தனதுஆடையில் ஒட்டிஇருந்த விதம் அண்மையில் சர்ச்சைகளை ஏற்பட்டிருத்தி இருந்தது.

இவ்விடயம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில்வழங்கிய நாமல் ராஜபக்ச, இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஒலிம்பிக் குழுமத்திடம் அறிக்கை கோரிஇருப்பதாகவும், இலங்கை வீரர்களது ஒழுக்க விதிகள் தொடர்பில் ஏற்பாடுகள் இல்லாதவிடத்து அதனை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.