கடந்த ஜீலை மாதத்தில் மாத்திரம் 4740 சிறுவர் துஷ்பிரயோகம் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் தெரிவிக்கையில்,

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மேல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளுக்கென குறிப்பிட்டதொரு தினத்தை ஒதுக்குவதற்கு நீதிசேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தவிர குறித்த தினத்தில் சிறுவர் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், அவ்வாறான வழக்குகளை இணம் காண்பதற்குரிய முறைமைகளை உருவாக்குதல் குறித்த விடையங்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிசேவைகள் ஆணை குழவினால் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அத்தோடு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்திற்கு அழைக்காமல், வேறு இடங்களில் வைத்து வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக சாட்சிகளை பதிவு செய்வதற்கான மத்திய நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, அனைத்து மாகாணங்களிலும் 9மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்.