தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் சட்டவிரோதமானது. அந்த சட்டத்தை நீடிப்பதால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. ஆகையால், விஞ்ஞான ரீதியில் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு, நாட்டை திறந்து வைத்திருப்பதற்கு சமாந்தரமானது. மக்கள் வீதிகளுக்கு இறங்கியிருந்தால், நாடு முடக்கப்படுவதற்கும் சுகாதாரப் பிரிவினர் எதிர்பார்த்திருப்பதற்கும் எவ்விதமான பிரயோசமும் இல்லையெனத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் இருக்கவேண்டுமாயின் நாட்டை வீடுகளுக்குள்ளே முடக்கி வைத்திருக்கவேண்டும் என்றார்.

பெருந்தெருக்கலுக்கு வராத சகல வாகனங்களும் வீதிகளில் ​ஓடுகின்றன. முன்னர் இருந்ததைப் போல, மக்கள் வீதிகளில் இருக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும்.

விஞ்ஞான முறைமையின் அடிப்படையில் நாட்டை முடக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கையை விடுத்துள்ளார். சரிந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டி​யெழுப்புவதற்கான யோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்
என்றும் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

நீண்டகால தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அர்த்தமுடையதாக இருக்கவேண்டுமாயின் விஞ்ஞான ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்றும் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார்