கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது.
அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார்.
சீன சபாநாயகர் லி ஜான்-ஷுவுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இந்நிலையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட மற்ற முதலீடுகளை சீனா செய்யும் என லி ஷான்-ஷு கூறினார்.
மேலும் இலங்கையின் நெருங்கிய நண்பராக பொருளாதாரத்தை வலுப்படுத்த தனது முழு ஆதரவை வழங்குவதாக சீன சபாநாயகர் உறுதியளித்தார்
இணைந்திருங்கள்