அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேற்றுமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனி வழி பயணத்துக்கு தயாராகிவிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், திட்டமிட்ட அடிப்படையில் அரசை விமர்சிப்பதாகவும், அரசுக்குள் இருந்துகொண்டு அவர்கள் இவ்வாறு செயற்படுவதால் அது அரசுக்கே பாதகமாக அமையும் எனவும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பில் முடிவொன்ற எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது சம்பந்தமாக கட்சி மேல் மட்டம் பரீசிலித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.