வருடத்தில் மீதமுள்ள காலத்திற்கு தடையின்றி எரிபொருளை விநியோகிக்க வேண்டுமாயின், இந்தியாவிடம் இருந்து கிடைக்க உள்ள 500 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் நான்கு பில்லியன் டொலர்கள் அவசியம் என தெரியவருகிறது.
இந்த நான்கு பில்லியன் டொலர்களை எப்படி தேடுவது என்பது தொடர்பாக கலந்துரையாட ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் மின்சார துறைகளுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க வேண்டுமாயின் தமக்கு டொலர் தேவைப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி தலைமையில் மேற்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மாதாந்தம் தேவைப்படும் எரிபொருள் தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு 90 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொன் டீசலும், 90 ஆயிரம் மெற்றி தொன் கச்சாய் எண்ணெயும் தேவைப்படுகிறது.
இணைந்திருங்கள்